மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் – அகமப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குதல் சார்பான அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மூலம் பெறப்பட்டது. அதன்நகலினை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள்  பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இணைப்பு

Internal mark Instructions+1 and +2

முதன்மைக் கல்விஅலுவலர்,

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்

நகல்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.