மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இறுதி பெயர் பட்டியல் வெளியீடு
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல்கள் 10-12-2018 முதல் 12-12-2018 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பெயர் பட்டியல்களை பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
மேலும் மார்ச் 2018ம் ஆண்டு நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்று தற்போது மார்ச் 2019ல் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட பெயர் பட்டியல்களில் திருத்தம் இருப்பின் (உதாரணத்திற்கு பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் , பிறந்த தேதி மாற்றம், மாணவர்களின் பெயர்களில் உள்ள எழுத்து பிழைகள் போன்ற இதர திருத்தங்கள்) பதிவிறக்கம் செய்யப்பட்ட நகலில் சிகப்பு மையால் திருத்தம் செய்து 13-12-2018 பிற்பகல் 02.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் B-5 பிரிவில் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 13-12-2018க்கு பிறகு திருத்தங்கள் மேற்கொள்ளும் விவரங்கள் பெறப்படமாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
( மாணவர்களின் பெயர் நீக்கத்திற்கு மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே நீக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. உரிய ஆவணங்கள் நகல் ஒப்படைக்கப்பட வேண்டும் )
இத்துடன்இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை எடுத்து துரிதமாக செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்
பெறுநர்
தலைமைஆசிரியர்
அனைத்து மேல்நிலைப் பள்ளிகள்
மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் முதல்வர்கள்
நகல்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.