அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
மார்ச்/ஏப்ரல் 2020 இடைநிலை/மேல்நிலை பொதுத்தேர்வுகள் – செய்முறை தேர்வுகள் மற்றும் தேர்வுப் பணிக்காக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி 13.12.2019க்குள் விவரங்களை உள்ளீடு செய்து அதன் நகலை இவ்வலுவலகத்தில் இணைப்பில் உள்ள சான்றுடன் ‘ஆ5’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒப்படைக்க வேண்டிய விவரங்கள்
1) FORMS-ன் கீழ் உள்ள STAFF DETAILS LIST -CLICK செய்து EXCEL-ல் download செய்துகொள்ள வேண்டும்.
2) FORMS-ன் கீழ் உள்ள STAFF LIST -CLICK செய்து EXCEL-ல் download செய்துகொள்ள வேண்டும்.
3) கீழே கொடுக்கப்படுடள்ள செயல்முறைகளின் இரண்டாவது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள சான்றினை பதிவிறக்கம் செய்து.
மேற்கண்ட இம்மூன்று கோப்புகளையும் print எடுத்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND CERTIFICATE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.