மாநில கல்வி அடைவுத் தேர்வு SEAS நடத்துதல் சார்ந்து தகவல்கள்

மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மாநில அடைவுத்தேர்வு 3, 6 மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் இத்தேர்வு 3.11.2023 அன்று மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

பள்ளி தலைமையாசிரியரின் பணிகளும் பொறுப்புகளும்:

1) தங்களுக்கு வழங்கப்படடும் வினாத்தாள் கட்டுகள் தங்கள் பள்ளிக்கு உரியதுதானா என்றும் மற்றும் வகுப்பு, Medium சரிபார்த்து வட்டார அளவிலான அலுவலர்களிடம் பெறுதல்.

2) நவம்பர் 2 அன்று தேர்வை நடத்தும் களப்பணியாளரிடம் (FI _B.Ed பயிலும் மாணவர்கள்) பள்ளி வினாநிரல் (SQ), ஆசிரியர் வினாநிரல் (TQ) முடிந்து மீண்டும் பெற்று தனி அலமாரியில் வைத்து பூட்டி பாதுகாத்தல்.

நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குதல்.

பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களும் 02.11.2023 மற்றும் 03.11.2023 ஆகிய நாட்களில் எவ்வித விடுப்பும் இன்றி பள்ளிக்கு வருகை புரிதலை உறுதிபடுத்தவேண்டும்.

அடைவு ஆய்வு நடக்கும் அறையின் வெளிச்சம், காற்றோட்டம், சரிபார்த்தல்.

வினாத்தாள் தொகுப்பிற்கான மந்தணத்தன்மையை பாதுகாத்தல்

அடைவுத்தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் தொகுப்பு SQ, TQ, PQ மற்றும் OMR / Field Note பயன்படுத்தப்பட்ட படிவங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத படிவங்களை தனித்தனியாக உறையில் வைத்து அன்று மாலையே வட்டார அளவிலான பொறுப்பு அலுவலரிடம் ஒப்படைத்தல்.

வினாத்தாள் நகலெடுத்தல், பார்த்தல், பகிர்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

தேர்வு நடைபெறும் போது கள ஆய்வு பணியாளர் (FI) தவிர தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பிற நபர்கள் தேர்வு அறைக்கு செல்லக்கூடாது.

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலை/உயர்நிலை /

மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.

நகல் –

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி/ தனியார் பள்ளிகள் )

 வேலூர் மாவட்டம்.

(தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)