அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் சார்பான விவரங்கள்.
இன்றைய நிலையில் கோவிட்-19 தொற்று உலக அளவில் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கிடையில் நமது பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. மாணவர்கள் 18 குறைவாக இருப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலை உள்ளது. அவர்கள் அச்சமில்லாமலும் நோய்தொற்று இல்லாமலும் பள்ளியில் பயில வேண்டும் எனில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாது. மாணவர்கள் எந்தவித இடையூறு இல்லாமல் பள்ளிக்கு செல்லலாம். அதனை கருத்தில் கொண்டு. அனைத்து பெற்றோரும் அரசின் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திகொள்ளும் திட்டத்தினை பின்பற்றுமாறு தலைமையாசிரியர்கள் அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்) கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை படிவம் 1 -ல் மாணவர்களிடம் பெற்று பின் படிவம் 2-ல் வகுப்பாசிரியர்களால் பூர்த்தி செய்யப்பட்டு தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களிடம் அளிக்க வேண்டும்.
தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் படிவம் 1 மற்றும் படிவம் 2 ஆகிய படிவங்களை பெற்று படிவம் 2 -ஐ (வகுப்புவாரியான விவரம்) படிவம் 3ல் தொகுத்து (பள்ளி சார்பான விவரம்) தலைமையாசிரியர்/ முதல்வர்கள் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், படிவம் 3 ( Word File)-ஐ இவ்வலுவலக மின் அஞ்சலுக்கு (velloreceo@gmail.com) அனுப்பிவைக்கும்படி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மாணவர்களின் குடும்ப உறுபினர் (18 years and above) எவரேனும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இருப்பின் அவர்களின் விவரம் மற்றும் விலாசத்தினை அருகில் உள்ள சுதாதார மையத்தில் ஒப்படைத்து அவர்களுக் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்