மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு அடல் டிங்கரின் ஆய்வகங்கள் (ATL) செயல்பட்டுவரும் விவரங்கள் கோரப்பட்டது. இதுவரை விவரங்களை உள்ளீடு செய்யாத மற்றும் அனுப்பாத பள்ளிகள் உடனடியாக 20.06.2022க்குள் உள்ளீடு செய்யவும் மற்றும் படிவங்களை அனுப்ப தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.. பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் 2017-2018ஆம் கல்வியாண்டு முதல் துவக்கப்பட்டு அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் (ATL) செயல்பட்டுவரும் விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படியும். மேலும், படிவங்களை பூர்த்தி செய்து தனிநபர் மூலம் 27.05.2022 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படியும் அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நினைவூட்டுகள் 03.06.2022, 16.06.2022  நாளிட்ட கடிதங்கள் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு சில பள்ளிகள் தவிர இதுநாள் வரை எவ்வித தகவலும் வரப்பெறவில்லை.  எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் உடன் நடவடிக்கை மேற்கொண்டு, 20.06.2022க்குள் விவங்களை இணைதளத்தில் உள்ளீடு செய்யும்படியும் படிவங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறும், எவ்வித தகவலும் இல்லையெனில் ‘இன்மை‘ அறிக்கையினை அனுப்பி வைக்குமாறும்  சார்ந்த (அனைத்து வகை) உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதனால் விவரங்களை பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் 20.06.2022க்குள் விவரங்களை அனுப்பாத தலைமையாசிரியர்கள் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 TO 4 -TO BE FILLED AND HANDEDOVER WITH HM SIGNATURE

CLICK HERE TO ENTER THE DETAILS IN FORM 1

CLICK HERE TO ENTER THE DETAILS IN FORM 2

CLICK HERE TO ENTER THE DETAILS IN FORM 3

CLICK HERE TO ENTER THE DETAILS IN FORM 4

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்