மணற்கேணி செயலி-அனைத்து வகை பள்ளிகளுக்கு தெரிவித்தல் மற்றும் பதிவிறக்கம் செய்தல் -சார்பு

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

பாடங்களின் கருப்பொருளை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், விளக்கப் படங்களாக உருவாக்கி இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், காணொளி வாயிலாக அனைத்து பாடங்களின் கருப் பொருளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், விளக்கப் படங்களாக உருவாக்கி, ஒரு செயலியின் மூலம் கிடைக்கப்பெறும் வகையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மணற்கேணி செயலியை வடிவமைத்துள்ளது.

தமிழக அரசால் (25.07.2023) அன்று மணற்கேணி செயலி வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மணற்கேணி செயலியில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் பாடங்கள் விளக்கப் படங்களாக கொடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக 12-ம் வகுப்பின் முதல் பருவப் பாடங்கள் மற்றும் 6 முதல் 11-ம் வகுப்பிற்கான பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தொடக்க கல்வி மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயலி விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக டவுன்லோடு செய்யலாம். ‘TNSED Student’ எனத் தேடி இச்செயலியை டவுன்லோடு செய்யலாம்.

இந்த செயலி மூலம் மாணவர்கள் எந்த பாடத்தையும் விட்டுவிடாமல் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், வசதி செய்யப்பட்டு உள்ளது. வெறும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதைக் காட்டிலும் புரிதல் தன்மையோது அறிவைக் கொண்டு புரிந்து கொண்டு பாடங்களைப் படிக்க வேண்டும். செயலியில் பாடம் நடத்தும் ஆசிரியர் மட்டுமில்லாமல் 2டி. 3டி, அனிமேஷனில் அதை விளக்கும் விதமாக வீடியோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis

மேற்குறிப்பிட்டுள்ள செயலி லிங்கினை பதிவிறக்கம் செய்து மாணாக்கர்கள் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

//ஒம்.செ.மணிமொழி //

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு