அனைத்து அரசு / நகரவை / ஆதிநலம்/ நிதி உதவி மற்றும் சுய நிதி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
தங்கள் பள்ளியில் பயிலும் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணாக்கர்களை வேலூர், நேதாஜி ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியை மாணாக்கர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு பார்வையிட செல்லும் பள்ளிகள் ஒரு நாள் முன்னதாகவே பார்வையிடச் செல்லும் மாணாக்கர்கள் விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் திரு.அதிசயநாதன் அவர்களிடம் தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண். 7010569228
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.