அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
பள்ளி குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தல் சார்பாக “வருமுன் காப்போம்” என்ற முறையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/ சுயநிதி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து “விழித்திரு கண்ணே” என்ற தலைப்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் விதமாகவும், குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாகவும், குழந்தைகளுக்கான உரிமைகளை எடுத்துரைக்கும் விதமாகவும் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த சைல்டுலைன் 1098 மற்றும் 14417 ஆகிய இலவச தொலைபேசி எண்களை பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற விவரத்தினையும், மாணவர்களுக்கு தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டத்தினை செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முடிவில் அனைத்து குழந்தைகளும் “I am safe/ I need help” என்று ஆங்கிலத்திலோ அல்லது ’‘நான் பாதுகாப்பாக இருக்கிறேன் / எனக்கு உதவி தேவை’’ என்று தமிழிலோ ஒரு சிறு துண்டு காகிதத்தில் எழுதி அவர்களுடைய நம்பிக்கைக்குரிய நபர்களின் தொலைபேசி எண்ணுடன் முகவரியும் சேர்த்து எழுதி மடித்து இத்திட்டத்தின் மூலம் கொண்டுவரும் சேகரிப்பு பெட்டியில் போட்டு விட மாணவ/ மாணவியருக்கு அறிவுறுத்த தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது சார்பாக Child Line திட்ட அலுவலர்கள் பள்ளிகளை அணுகும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி விழிப்புணர்வு நிகழ்வினை சிறப்பாக செயல்படும்வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.