அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
கோவிட்-19 விழிப்புணர்வு தகவல்
கோவிட் -19 தற்சமயம் 2ம் அலை நாடுமுழுவதும் காணப்படுவதால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் தங்களை காத்துக்கொள்ள முககவசரம் அணிதல், அரசால் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல், அடிக்கடிகைகளை கழுவுதல், சமுக இடைவெளியினை பின்பற்றி பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் 45 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுபரியும் அலுவலகப்பணியாளர்கள் தங்கள் பள்ளி அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சுகாதார நிலையம்/ வட்டாரக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யவும். மேலும், கீழ்கண்ட படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்