பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 26.07.2024 அன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து கலந்தாய்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக, பொதுமாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள முதுகலை ஆசிரியர்களில் ஒவ்வொரு பாடத்திலும் (Each and Every Subject)  601 முதல் இணைப்பில் உள்ள  முன்னுரிமை பட்டியலில் உள்ள அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்க அனைத்து அரசு/ நகரவை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்