பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை (அ) தாய் விபத்தில் இறந்து விட்டாலோ – நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி வழங்கும் திட்டம் – EMIS Portal வழியாக கருத்துருக்கள் சமர்ப்பித்தல்- தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக.

அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி கவனத்திற்கு,

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ /மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை (அ) தாய் விபத்தில் இறந்து விட்டாலோ –நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ/மாணவியர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு 01.07.2023-க்கு பிறகு பெறப்படும் கருத்துருக்கள் இணையதளம் மூலம் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் EMIS Portal  வழியாக சமர்ப்பித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, 01.07.2023-க்கு பிறகு பெறப்பட்ட கருத்துருக்கள் அனைத்தும் EMIS Portal  வழியாக சமர்ப்பிக்க அனைத்து அரசு/அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அரசு/அரசு நிதயுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.