பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2026-2027ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு உதவிபெறும் /பகுதி நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – தேவைப்பட்டியல், இருப்பு விவரம் மற்றும் நிகரத் தேவைப்பட்டியல் விவரம் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் Excel படிவ நகலினை இவ்வலுவலகத்தில் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு சமர்ப்பித்தல் – சார்பு.

2026-2027ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதி நிதி உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ், பயன்பெறவுள்ள மாணாக்கர்களின் தேவைப்பட்டியல், இருப்பு விவரம் மற்றும் நிகரத் தேவைப்பட்டியல் (Requirement, Stock & Net Requirement) ஆகிய விவரங்களை, வழங்கப்பட்டுள்ள கூகுள் தாளில் (Google Sheet) 23.09.2026 அன்று மாலை 06:00 மணிக்குள் தவறாமல் பூர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1cD4aiYlvGUJfbofx0B8MvS1cZal2yOPdb_FZb-KoNw8/edit?usp=sharing

மேலும், இணைப்பில் உள்ள Excel படிவத்தைப் பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் சான்றொப்பமிட்ட அசல் நகலினை 25.09.2026 அன்று காலை 11:00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.