வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து பணிநிரவல் கலந்தாய்வு 11.06.2024அன்று நடைபெற்றது. பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துக் கொண்டு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 11.06.2024அன்றே பணியிலிருந்து விடுவித்திட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்,
பெறுநர்,
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.