தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்க பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
மேலும் கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் அரும் பணிகள் குறித்து பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்திடவும் பரிசுகள் வழங்கி ஊக்குவித்திட வேண்டும் என்றும், பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடிய நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் அறிக்கையாக முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
பெறுநர்
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்