REVISED-பள்ளிக்கல்வி- வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் நாளை (14.10.2023 அன்று) காலை 09.30 மணியளவில் நடைபெறுவதால் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலையாசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறும், சார்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் தங்கள் கடந்த 5ஆண்டு(மாணவ/மாணவியர்கள் எண்ணிக்கை,தேர்ச்சி சதவீதம்,சராசரி) அறிக்கையுடன் கூட்டத்திற்கு காலதாமதம் இன்றிஉரிய நேரத்தில் வருமாறு அனைத்து முதுகலை பாட ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்,

அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/

அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித்

தலைமையாசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.