பத்தாம் வகுப்பு மார்ச் 2019 மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்வது சார்பாக

பத்தாம் வகுப்பு மார்ச் 2019 மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்வது சார்பாக

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

பத்தாம் வகுப்பு மார்ச் 2019ல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக ஆன் லைனில்

19-11-2018 முதல் 30-11-2018 வரை பெயர் பட்டியல் பிழைகளை திருத்தம் மற்றும் கூடுதல் விவங்கள் இருப்பின் அதன் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்பினை பயன்படுத்தி பெயர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய உரிய துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவே இறுதி வாய்ப்பு என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

SSLC NR PREPARATION

SSLC NR

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் /

மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.