அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
நடைபெற்று முடிந்த ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்வர்களின் தலைப்பெழுத்து பெயர் (தமிழ்/ஆங்கிலம்) தாய் மற்றும் தந்தை பெயர் பிறந்த தேதி, புகைப்படம் பள்ளியின் பெயர் (தமிழ்/ஆங்கிலம் ) ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வர்களின் மாற்றுச்சான்றிதழுடன் இணைத்து வேலூர்,அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 28.08.2023 முதல் 08.09.2023 க்குள் ஒப்படைக்க பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஓம்.செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் .
பெறுநர்
அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள் )தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்டுகிறது.