அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளி
வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி – பள்ளிக் கல்வி – அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி/ முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – ஆசிரியருடன் உபரி – ஆசிரியர்களை பணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 27.11.2023 அன்று வேலூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறும் என அனைத்து அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை மேற்காண் தேதியில் நடைபெறும் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்ப பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்.