நீட் 2021 தேர்விற்கு தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டின்படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது – 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் விவரத்தை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

நீட் 2021 தேர்விற்கு தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டின்படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது – 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் விவரத்தை தயார் நிலையில் வைத்திருக்க 26.03.2021 அன்று தெரிவிக்கப்பட்டது.

+2 வகுப்பில் அறிவியல் பிரிவுகளில் முதல் இரு மதிப்பெண் பெறும்  மாணவர்களின்  (Outstanding and top scorers in the school ) விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இம்மாணவர்களுக்கு  நீட் தேர்விற்கு பயிற்சி வழங்க இருப்பதால் உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யுமாறு  தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.