அரசு /அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்
2022 – 2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெயர் பட்டியலினை (குறைந்தது ஒரு பள்ளிக்கு 2 மாணவர்கள் வீதம்) இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 27.10.2023க்குள் அனுப்பிட தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை இணைப்பில் உள்ள பள்ளிகளிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை. இனியும் காலதாமதத்திற்கு இடமளிக்காமல் உடனடியாக படிவங்களை பூர்த்தி செய்து முதன்மைக்கல்வி அலுலவக ஆ1 பிரிவு எழுத்தரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்