நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் 2021-க்கான இரண்டாம் தேர்தல் பயிற்சி வகுப்புகள் 29-09-2021 அன்று நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்ட ஆட்சியரின்
உத்தரவின்படி
 நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தேர்தல் பணியில்   அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியரல்லாத பணியாளர்கள் 29-09-2021 அன்று நடைபெறும் இரண்டாம் கட்ட  தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள உள்ளதால்  மாவட்ட ஆட்சியர் அவர்களின்
ஆணைக்கிணங்க அனைத்துவகை பள்ளிகளுக்கும்  
29-09-2021அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

தேர்தல் பணிக்கான ஆணை பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் குறித்த நேரத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

30-09-2021 வியாழக்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து  ஆசிரியர்கள்/ பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்