அனைத்து அரசு / நகரவை /அரசு நிதியுதவி /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
நடைபெறவிருக்கும் மார்ச் /ஏப்ரல் -2026 இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகள் சார்பாக , பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளம் மூலும் பெறப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் 12.12.2025 அன்று சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்படுகிறது.
மேலும் இணைப்பில் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் /ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்களை சரிபார்த்து எவர் பெயரும் விடுபடாமல் அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளது எனவும் அல்லது திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொண்டு தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 15.12.2025 அன்று மாலை 5.௦௦ மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ4 பிரிவில் ஒப்படைத்திட தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஒரு சில பள்ளிகளில் இதுநாள் வரை தலைமை ஆசிரியர் /ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்களை சரிபார்த்து ( DATE OF JOINING IN PRESENT POST ) எவர் பெயரும் விடுபடாமல் அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளதை உறுதி செய்து திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொண்டு தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 05.01.2026 அன்று மாலை 5.௦௦ மணிக்குள் சமர்ப்பித்திட்ட சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மீள தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆசிரியர்களின் விடு பட்டிருப்பின் சார்ந்த பள்ளியின் தலைமையாசிரயரே முழுபொறுப்பாவார் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
//ஓம். //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு /நகரவை /அரசு நிதியுதவி /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
