அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
10.04.2023 முதல் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் இணைப்பில்உள்ள முதுகலை ஆசிரியர்கள் /அலுவலக பணியாளர்களை முகாமில் பணியேற்கும் வகையில் 10.04.2023 அன்று காலை 8.30 க்கு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளிமுகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு சார்ந்த அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் /சார்ந்த அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதுகலை ஆசிரியர்கள் வருகைபுரியும்போது இணைப்பில் உள்ள விடுவிப்பு சான்றுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஓம்/-க.முனுசாமி,
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காகவும், தொடர்நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.
வட்டார கல்வி அலுவலர் , வட்டார கல்வி அலுவலகம் (பேர்ணாம்பட்டு) அவர்களுக்கு தகவலுக்காகவும், தொடர்நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.