தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு -அக்டோபர் -2022 தேர்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஊக்கத் தொகை வழங்க -வங்கி வணக்கு விவரங்கள் -கோருதல்-சார்பு

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர்-2022 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளின் விவர பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

மேலும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலின் படி 2022-2023 ஆம் நிதியாண்டிற்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை வழங்க மாணவர்களின் வங்கி கணக்கு முதல் பக்க நகல் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் இவ்வலுவலக ஆ4 பிரிவில் 16.06.2023 அன்று பிற்பகல் 2.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் மீள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

இணைப்பு : தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல்

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தவலுக்காக அனுப்பப்படுகிறது.