தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நவம்பர் 2021 விண்ணப்பம்பெறுதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் 11-10-2021 முதல் 18-10-2021 வரை (14-10-2021 முதல் 17-10-2021 வரைவிடுமுறை நாட்கள் தீவிர்த்து) விண்ணப்பங்கள் அளித்து பதிவு செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்தியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ப பொதுமக்கள் அறியும் வண்ணம் தங்கள்பள்ளியின் தகவல் பலகை மூலமாக தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் விவரம்

  1. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர்
  2. நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி தோட்டப்பாளையம்
  3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி காட்பாடி

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்

சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பலாகிறது.

நகல்

மாவட்டக்கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

இணைப்பு