சுற்றறிக்கை – 1

அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர்/உயர்  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரங்களை தினமும் “PM POSHAN MDM APP “ ஐ தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து தினமும் காலை 11.00 மணிக்குள் தவறாமல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. “PM POSHAN MDM APP “ ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறைக்கான விவரம் இணைப்பில் தரப்பட்டுள்ளது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.