தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலர் (ம) செயல் அலுவலர் அவர்களின் கடிதத்தில், 2024-ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதபயணத்தில் மாற்றுப்பணியில் சௌதி அரேபியாவில் தன்னார்வாலர்களாக பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் www.hajcommittee.gov.in எனும் இணையதளத்தில் 15.02.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவரங்களை பெற்று தொகுத்து தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் 19.02.2024-க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்,
- கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகம், வேலூர்
- மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தொடக்கப் பள்ளிகள்/தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்
- அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்