சிறப்பு ஊக்கத்தொகை – அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை – மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது – முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்படாதது – விடுபட்ட கலங்களை பூர்த்தி செய்து நாளை (07.10.2020) மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கக் கோருதல்

சார்ந்த அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டது – அவ்வாறு முழுமையான விவரங்கள் பதிவு செய்யப்படாத மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இணைப்பிலுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள்  விடுபட்ட கலங்களை முழுமையாக பூர்த்தி செய்து நாளை (07.10.2020) மாலை 5.00 மணிக்குள் velloreceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குவிட்டு கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கலாகிறது.

இது மிகவும் அவசரம்

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE STUDENT LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.