காலிப்பணியிட விவரம் சமர்ப்பிக்காத பள்ளிகள் – 01.06.2022 நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் – உடனடியாக இன்று (03.06.2022) மாலைக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்துதல்

சம்மந்தப்பட்ட அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

01.06.2022 நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து 02.06.2022 மாலைக்குள் இவ்வலுவலக ‘அ3‘ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதுநாள் வரை இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்கவில்லை. இது மிக மிக அவசரம் என்பதால் இன்று (03.06.2022) மாலைக்குள் தவறாமல் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு : காலிப்பணியிடம் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை தவறாமல் சமர்ப்பிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்