ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 ,இணைப்பில் காணும் முதன்மைக் கண்காணிப்பாளர், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்கள் கூட்டம் 04.06.2019 காலை 09.30 மணிக்கு ஹோலிக்கிராஸ் மெட்ரிக் பள்ளி,சத்துவாச்சாரி,

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்

கவனத்திற்கு

08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு 2019 தொடர்பான ஆயத்தக் கூட்டம் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அவர்களின் தலைமையில் 04-06-2019 அன்று காலை 09.30 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிக்கிராஸ்  மெட்ரிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு இணைப்பில் காணும் அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது கட்டாயம்  தங்களுக்கு  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டி புத்தகம்  கொண்டுவருதல் வேண்டும். இத்துடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் நடைபெறும் தேர்வு மைய விவரம் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தின் விவரம் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு

NAME LIST- 

TNTET I PAPER CENTRE LIST

TNTET II PAPER CENTRE LIST

 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்

பெறுநர்

முதன்மைக் கண்காணிப்பாளர்கள்

கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள்

துறை அலுவலர்கள்

கூடுதல் துறை அலுவலர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.