ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் விவரங்கள் உள்ளீடு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்

ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் விவரங்கள்  உள்ளீடு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் நடைபெறவுள்ள இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் பணிக்காக வேலுர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களின் விவரங்கள் ஏற்கனவே www.edwizevellore.com என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளீர்கள்.

தற்போது அந்த விவரங்களில் எதேனும் திருத்தங்கள் இருப்பின் உதாரணத்திற்கு ஆசிரியர்கள் மாறுதல் பெற்றிருந்தால் தங்கள் பள்ளி விவரங்களிலிருந்து அவ்வாசிரியர்கள் விவரம் நீக்கம் செய்யப்பட வேண்டும். புதியதாக தங்கள் பள்ளியில் சேர்ந்திருந்தால் அவ்வாசிரியர்கள் விவரங்கள் உள்ளீடு செய்தல் வேண்டும். பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, தற்போதைய பணியில் சேர்ந்த தேதிகளில் தவறுகள் இருந்தால் திருத்தங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விவரம் கட்டாயம் உள்ளீடு செய்திருக்க வேண்டும். எனவே மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களை www.edwizevellore.com என்ற இணையதளத்தில் 12-12-2018க்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் உள்ளீடு செய்த விவரங்களை www.edwizevellore.com என்ற இணையதளத்தில் 13-12-2018 அன்று வெளியிடப்படும். அப்படி வெளியிடப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களில் திருத்தங்கள் மேலும் செய்யப்படவேண்டுமெனில்     14-12-2018 அன்று மாலை 05.00 மணிக்குள் அனைத்து விதமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. திருத்தங்கள் முடிவுற்ற பின் இறுதி பெயர் பட்டியலின் அடிப்படையில் தேர்வு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

தலைமைஆசிரியர்

அனைத்து மேல்நிலைப் பள்ளிகள்

மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.