அவசரம்-வேலூர் மாவட்டம், 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 12 வகுப்பு கல்வி பயின்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு, கீழ்காணும் காரணங்களால் கல்வி உதவித்தொகை விடுவிக்க இயலாத நிலையில் உள்ளதுமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குறிப்பிட்டுள்ளார் .

  1. வங்கி கணக்கு துவங்காமல் இருத்தல்.
  2.  வங்கி கணக்கில் போதிய இருப்புத் தொகை இல்லாமல் இருத்தல்.
  3.  வங்கி கணக்கு துவங்கப்பட்டு ஆதாருடன் இணைக்கப்படாமல் இருத்தல்.(Aadhar Seeded Bank Account).

மேலும், இணைப்பில் காணும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மேற்காண் பொருள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தங்கள் பள்ளிகளின் மாணவர்களின் பெயர் பட்டியல் அடங்கிய குறைகளை நிவர்த்தி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

                    வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்

வேலூர்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்,

       (இடைநிலை)

மாவட்டக் கல்வி அலுவலகம்,

வேலூர்.

(தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது).