அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS – Aadhaar Enabled Biometric Attendance System)- கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக 31.03.2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேட்டினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS – Aadhaar Enabled Biometric Attendance System)- கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக 31.03.2020 வரை ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேட்டினை பயன்படுத்துதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்