அரசால் வழங்கப்படுகிற விலையில்லா பாடப்புத்தகம் வரும் வெள்ளிக்கிழமை (17.06.2022)க்குள் அனைத்து பள்ளிகளிலும் பெற்று மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தல்

முக்கிய செய்தி

வரும் 21.06.2022 அன்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் வேலூர் மாவட்டத்திற்கு வருகைபுரியவுள்ளார். அரசால் வழங்கப்படுகிற விலையில்லா பாடப்புத்தகம் வரும் வெள்ளிக்கிழமை (17.06.2022)க்குள் அனைத்து பள்ளிகளிலும் பெற்று மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மாணாக்கர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாமல் காணப்படுமாயின் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முழுப் பொறுப்பேற்க நேரிடுமென திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. புத்தகங்கள் பெறப்பட்டு மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டது என்ற அறிக்கையினை வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

// அவசரம் மற்றும் மிக முக்கியம் //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.