அமைச்சுப் பணியாளர்களுக்கான கணினி பயிற்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை விடுவித்து அனுப்ப கோருதல்
வேலுர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்களுக்கான கணினி பயிற்சி 26-11-2018 முதல் வி ஜ டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற பயிற்சியின் வருகைப் பதிவேட்டினை சரிபார்த்ததில் ஒரு பள்ளியிலிருந்து ஒரு அமைச்சுப் பணியாளர் மட்டுமே வருகை புரிந்துள்ளார் என்பது வருந்த தக்க செயலாக உள்ளது. எனவே நாளை நடைபெறும் பயிற்சியின் போது ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைச்சுப் பணியாளர்களும் கலந்துக்கொள்ளும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அமைச்சுப் பணியாளர்களை பயிற்சிக்கு விடுவித்து அனுப்ப வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு அமைச்சுப் பணியாளர்களை விடுவிக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய காரணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ 1 பிரிவில் நேரில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
ஒரே பள்ளியில் பணிபுரியும் அனைத்து அமைச்சுப் பணியாளர்களை ( உதவியாளர் / இளநிலை உதவியாளர் / ஆய்வக உதவியாளர் / பதிவு எழுத்தர்) இப்பயிற்சிக்கு கலந்துக் கொண்டு பயன்படும் வகையில் பணியலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என மீண்டும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்