அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 23.12.2019 அன்று பிற்பகல் 12.00 மணியளவில் காட்பாடி காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்க கூட்ட அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் அனைத்து நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும், கூட்டத்திற்கு வரும்போது தங்கள் பள்ளியின் இறுதியாக பெற்ற அங்கீகார ஆணை நகலையும், நிரந்தர அங்கீகாரமாயின் நிரந்தர அங்கீகார ஆணை நகலையும் கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்