அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நலம் / அரசு நிதியுதவி / தொடக்க / நடுநிலை/ உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2023 ஜுன் மாதத்தில்  ஏதேனும் ஒரு நாளில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கொண்டாடும் பொருட்டு சுற்றுச் சூழல் மன்றம் / தேசிய பசுமைப்படை மாணவர்கள் மூலமாக மரக்கன்றுகள் நடுதல், வினாடி வினா கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி போன்ற  நிகழ்ச்சிகளை பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும். மேலும் நிகழ்ச்சியின் புகைப்படத்துடன் கூடிய செயல்பாட்டு அறிக்கையினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து அரசு / அரசு நிதியுதவி / தொடக்க / நடுநலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள்  

மற்றும் மெட்ரிக் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்  (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்.
  2. மாவட்டக் கல்வி அலுவலர்,  (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.
  3. மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.

     (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)