அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்குதல் பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களும் பள்ளி வேலை நேரத்திற்கு தினமும் பள்ளிக்குச்சென்றுவர அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், சுழற்சி அடிப்படையில் அலுவலகப் பணியாளர் ஒருவர் மற்றும் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்களுடன் பள்ளிக்கு சென்று மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கி எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், 2018-2019 மற்றும் 2019-2020 கல்வி ஆண்டுகளில்+2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி விவரங்களை ERP Entry மேற்கொள்ளாத பள்ளி தலைமையாசிரியர்கள் அப்பணியினை முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.