மற்ற செய்திகள்

EMIS சார்ந்த பணிகள்

தற்போது நடைமுறையில் உள்ள EMIS சார்ந்த பணிகளான 1) விலையில்லா பொருட்கள் (All Govt/Aided Schools) Updation( Inprogress consider as Pending ) 2) நான் முதல்வன் -உயர்கல்வி திட்டம் - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Email ID Updation 3) முன்னாள் மாணவர் மன்றம் (All Govt schools) 4) Health Well-being Updation(All Govt/Aided Schools) 5)Battery Test Updation(Govt/Aided Schools) 6)Library Books Shuffle(Every Monday) 7)தமிழ் வழி சான்றிதழ் Approval 8)பள்ளிப் பார்வை 9) Leave Application Approval 10) கலையரங்கம் 11) HI-TECH LAB QUIZ மேற்காணும் தலைப்புகளில் தங்கள் பள்ளி அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிலுவையில் உள்ள பள்ளிகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. HIGH-SCHOOL-ALL-PendingsDownload PENDING-GOVT-HR-SEC-SCHOOLSDownload

வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகரவை / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் பகுதி நேர பணிக்காலத்தில் 50% விழுக்காட்டை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் சார்பாக.

அனைத்து அரசு / நகரவை / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு / நகரவை / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் பகுதி நேர பணிக்காலத்தில் 50% விழுக்காட்டை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் சார்பாக இணைப்பில் காணும் கடிதத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதன் அறிக்கையினை உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Vocational-court-case-circularDownload

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி – 01.01.2023ல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து கருத்துருக்கள் பெறப்பட்டு உத்தேச பெயர் பட்டியல் வெளியிட்டமை – திருத்தம், நீக்கம் மற்றும் சேர்த்தல் – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் HSS-PANEL-2023-Download HM-PANEL-2023-11Download

பள்ளிக் கல்வி  – அரசு பள்ளி மாணவர்களிடையே நிதிக் கல்விக் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி – வட்டார மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள்  அனுப்ப கோருதல் – தொடர்பாக

CLICK THIS BELOW LINK TO ENTER RBI QUIZ PROGRAM WINNERS ACCOUNT DETAILS - REG https://docs.google.com/spreadsheets/d/1wr6Ar6bTpS7SdgBGOTxcVmskZQc5ZOG7NZT3zzryPVM/edit?usp=sharing 2194.B5.18.07.2023-RBI-Winners-Account-DetailsDownload RBI-Account-details-of-Winners-at-District-and-Block-Level-2Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – சார்ந்த பள்ளி தலைமையாசியர்கள், வேலூர் மாவட்டம். நகல்- Lead District Manager, Velloreமாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம். (சார்ந்த பள்ளிக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு) இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக

மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி – ஆசிரியர்கள் பட்டியல்

6,7 & 8 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி கற்றல் விளைவுகள் மற்றும் கற்றல் மதிப்பீடு சார்ந்த பொருண்மைகளில் பயிற்சி வழங்க மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி 21.07.2023 அன்று வேலூர், அரசு முஸ்லிம் மேனிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இணைப்பில் உள்ள ஆசிரியர்களை பணி விடுப்பு செய்ய சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம் District-level-CRC-Facilitator-list-Class-6-8-VLR-21.07.2023Download

சந்திரயான் -3

இணைக்கப்பட்டுள்ள காணொலி காட்சியினை மாணாக்கர்கள் பார்த்து பயன்பெறும் வகையில் பதிவிறக்கம் செய்து ஒளிப்பரப்பிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.பெறுநர்அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலம் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -2 / பள்ளிகளில் காலியாகவுள்ள / அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் சார்ந்த விவரங்கள் உரிய படிவத்தில் வழங்க மிக மிக அவசரம் கருதி 13.07.2023 அன்று பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கோரப்பட்டது. ஆனால் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுவரை விவரங்கள் அளிக்காதது மிகவும் வருந்தத்தக்கதாகும். எனவே அவசரம் கருதி நாளை 15.07.2023 காலை 11.00 மணிக்குள் உரிய படிவங்கள் பூர்த்தி செய்து முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள B.2 பிரிவு எழுத்தரிடம் தவறாமல் ஒப்படைக்குமாறு இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

DocScanner-14-Jul-2023-7-06-pmDownload DocScanner-14-Jul-2023-7-03-pmDownload // ஒம்//செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் – பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்பு

தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்க பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது மேலும் கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் அரும் பணிகள் குறித்து பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்திடவும் பரிசுகள் வழங்கி ஊக்குவித்திட வேண்டும் என்றும், பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடிய நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் அறிக்கையாக முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம் பெறுநர்அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

// மிகமிக அவசரம்// பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட / காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் சார்பான விவரங்கள் கோருதல் – தொடர்பாக.

DocScanner-13-Jul-2023-12-53-pmDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி- பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவிற்கு வழங்கப்பட்ட தொடு உணர்வு உபகரணங்கள் – முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல் – தொடர்பாக.

Biometric-sch-cirDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நல / அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வே.மா.,