EXAMINATION

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு  ஜூன் 2019 –  மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு ஜூன் 2019 – மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு ஜூன் 2019 - தேர்வு முடிவுகள் தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு  விண்ணப்பங்கள் ஆன்லைனில் 24-07-2019  காலை 10.00 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து  தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் 25-07-2019 காலை 10.00 மணி முதல்  26-07-2019 அன்று மாலை 05.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள்  scan.tndge.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட  செய்
12ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச வாழ்வியல் திறன் பயிற்சி  வகுப்புகள் அயான் பவுண்டேசன் மூலமாக நடத்துதல்

12ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் அயான் பவுண்டேசன் மூலமாக நடத்துதல்

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 12ம் வகுப்பு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் அயான் பவுண்டேசன் மூலமாக நடத்துவது சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு 1199 B5 2019 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 தேர்வுக் கால அட்வணை

இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 2020 தேர்வுக் கால அட்வணை

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020ல் நடைபெறவுள்ள இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் கால அட்டவணை இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை  மூலமாகவும், மாணவர்களுக்கு பள்ளி தகவல் பலகை மூலமாகவும் தெரிவிக்குமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு கால அட்டவணை 10th , +1, +2 Exam Time table and Result Date -March 2020(1) முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வா
10ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019  தேர்வு முடிவுகள் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல்

10ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 தேர்வு முடிவுகள் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் 12-07-2019 அன்று சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில்  வெளியிடப்பட்டதை  தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர்கள் 15-07-2019 மற்றும் 16-07-2019 ஆகிய இரண்டு நாட்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வருகைபுரிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரிமிருந்து பெறப்பட்ட கடிதம் இணைத்தனுப்பலாகிறது. இணைப்பு Re totalling Instructions முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து உயர் மற்றும்  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலு
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பணிகள்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பணிகள்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் பணிகள் சார்பான சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் சார்பான விவரங்களை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு school circular   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் திருப்பத்துர் / வேலுர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி  தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.  
மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் 10-07-2019 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து ஆன்லைனில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகள் தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 11.07.2019 மற்றும் 12.07.2019 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் வருகைபுரிந்து உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.   மேற்குறிப்பிட்டுள்ள விவரங்கள் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அறியும் வகையில் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09-07-2019  அன்று  நடைபெற்றமை , கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளி தலைமை ஆசிரியர்கள்  உரிய விளக்க கடிதத்துடன்  11-07-2019 மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய வேண்டும்.

மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09-07-2019 அன்று நடைபெற்றமை , கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய விளக்க கடிதத்துடன் 11-07-2019 மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய வேண்டும்.

கீழ்க்காணும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்தற்கு மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09.07.2019 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளிதலைமை ஆசிரியர்கள் உரிய விளக்க கடிதத்துடன் 11-07-2019 அன்று மாலை 05.00 மணிக்கு வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  நடைபெறவுள்ள கூட்டத்தில் கட்டாயம்  தலைமை ஆசிரியர்கள் மட்டும்  கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கூட்டத்திற்கு வரும்போது இவ்வாண்டு தேர்ச்சி சதவீதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விவரத்தினை கொண்டுவரும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 11-07-2019 அன்று நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துக்கொள்ள வில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள
வேலூர் பள்ளிக்கல்வி மற்றும் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் இணைந்து மரக் கன்றுகள் வளர்க்கும் பயிற்சி வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் 25.06.2019 அன்று  நடைபெறுதல் வழங்குதல்

வேலூர் பள்ளிக்கல்வி மற்றும் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம் இணைந்து மரக் கன்றுகள் வளர்க்கும் பயிற்சி வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் 25.06.2019 அன்று நடைபெறுதல் வழங்குதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (13.06.2019 அன்று நடைபெற்ற துவக்க விழா பயிற்சியில் கலந்துகொள்ளாத உயர்நிலைப் பள்ளிகள் மட்டும்) ஈஷா பசுமை பள்ளி இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழா 13.06.2019 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து தலா ஒரு பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ள தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில பள்ளிகளில் இருந்து மாணவர்கள்/ ஆசிரியர்கள் எவரும் பங்கேற்கவில்லை. எனவே, 25.06.2019 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பயிற்சியில் 13.06.2019 அன்று கலந்துகொள்ளாத பள்ளியிலிருந்து ஒரு பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் அனுப்பிவைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கீழே கொடுக்க
மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019- மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு வேலுர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல்

மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019- மைய மதிப்பீட்டு முகாம் பணிக்கு வேலுர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புதல்

வேலுர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த மேல்நிலை  இரண்டாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 2019 தொடர்பான மைய மதிப்பீட்டு முகாம் காட்பாடி, வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இம்முகாம் மதிப்பீட்டு பணிக்கு வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து முதுகலை ஆசிரியர்களை இன்று (20-06-2019) 01.00 மணிக்குள் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு வேலுர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர்  தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.