மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு

ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் 10-07-2019 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து ஆன்லைனில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

மேலும் தேர்வு முடிவுகள் தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 11.07.2019 மற்றும் 12.07.2019 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் வருகைபுரிந்து உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

 

மேற்குறிப்பிட்டுள்ள விவரங்கள் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அறியும் வகையில் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள தகவல் பலகை மூலம் விவரங்கள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இணைத்தனுப்பப்படுகிறது.

இணைப்பு

June 2019 Hr Sec Second Year Result release

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.