மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு ஜூன் 2019 – மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் தேர்வு ஜூன் 2019 – தேர்வு முடிவுகள் தொடர்ந்து விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு  விண்ணப்பங்கள் ஆன்லைனில் 24-07-2019  காலை 10.00 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து  தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

மேலும் 25-07-2019 காலை 10.00 மணி முதல்  26-07-2019 அன்று மாலை 05.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள்  scan.tndge.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும். மேலும் இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட  செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்திக் குறிப்பினை மாணவர்கள்  மற்றும்  பெற்றோர்கள் அறியும் வண்ணம் பள்ளியில் உள்ள தகவல் பலகை மூலம் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

RV – RT Scripts Downloading

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.