2022-2023- காலாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

2022-2023- காலாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கட்டுகளை அவரவர்க்கு ஒதுக்கப்பட்டுள்ள மையத்திற்கு சென்று காலை 8 மணிக்கு மேல் தினமும் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்வுகள் இல்லாத வேளைகளில் மாணவ / மாணவியருக்கு திருப்புதல் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். தமிழ் / ஆங்கிலம் / உருது வழி வினாத்தாட்களை தவிர பிற மொழி பாடங்களை அந்தந்த பள்ளியிலேயே வினாத்தாள் தயாரித்து எந்த புகாருக்கும் இடமாளிக்காமல் தேர்வுகள் நடத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்