Author: ceo

வேலூர் மாவட்டம் – அரசு/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் – ஆய்வக உபகரணங்களை கையாளுதல் – பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆய்வக உதவியாளர்களை பணிவிடுப்பு செய்தல் – சார்ந்து

CIRCULARS
வேலூர் மாவட்டம், அரசு/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள், ஆய்வக உபகரணங்களை கையாளுதல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்த பயிற்சி 12.04.2024 முதல் 27.04.2024 முடிய இணைப்பில் உள்ளவாறு வேலூர், சாய்நாதபுரம், ந.கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் கலந்து கொள்ள ஆய்வக உதவியாளர்களை பணிவிடுப்பு செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Lab-Assitant-trainingDownload LAB-ASST-BATCH-1Download LAB-ASST-BATCH-2Download LAB-ASST-BATCH-3Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

சத்துணவு உண்ணும் மாணவர்கள் _ EMIS STUDENTS LIST_TNSED SCHOOL APP விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக…

அனைத்து அரசு/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு தங்கள் பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்கள் விபரங்களும் சார்ந்த வகுப்பு ஆசிரியர்களைக் கொண்டு EMIS STUDENTS LIST ல் சரிபார்க்க வேண்டும். மேலும் TNSED SCHOOL APP ல் சத்துணவு உண்ணும் மாணவர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது எனவே தங்கள் பள்ளியில் பணிகளை முடித்த சான்றினை தங்கள் ஒன்றியத்தில் வட்டார வள மையத்தில் 10.04.2024 பிற்பகல் 12 .00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது சான்றுDownload முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

இணைப்பு பயிற்சி _ விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக சமர்ப்பித்தல் சார்பு

அனைத்து அரசு உயர் மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு...G FORM LINKhttps://forms.gle/TCdy8uRBoM6J5LsQA இணைப்பு பயிற்சி சார்ந்த தற்போதைய விவரங்களை மேற்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்துஉடனடியாக சமர்ப்பித்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் அரசு உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மதிய உணவு உண்ணும் மாணவர்கள்- TNSED School App ல் பதிவு செய்தல் சார்பாக…

மதிய உணவு உண்ணும் மாணவர்கள் 📱 TNSED SCHOOLS APP NEW UPDATE | NOON MEALS MODULE CHANGES மதிய உணவு உண்ணும் மாணவர்கள் விபரங்களை பதிவு செய்ய TNSED School Appல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கையாளும் வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட loginல் சென்று இன்று (06.04.2024) பிற்பகல் 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் குறிப்புApp update செய்த பின் பணிகளை மேற்கொள்ள வேண்டும் 🔗 Direct Link to update App👇 https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் அரசு/நிதியுதவி உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்தில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ / மாணவியர்களுக்கு பள்ளிகளில் சமூக நலத்துறையின்  கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகள்  அளவு எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது / தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணைய தளத்தில் சேர்க்கை திருத்தம் செய்து பதிவேற்றம் செய்தல்  – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4416-B2-2024-dt-05-04-2024Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் . பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு அரசு உதிவிபெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பயன்படுத்துவது குறித்து கீழ்க்காணும் வழிக்காட்டுதலின் படி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல்- தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
1341-B1-2024-5-04-2024Download DSE-12th-Hi-Tech-Lab-Career-Guildance-1Download Higher-Education-Courses-and-Support-Systems-Links-Career-GuidanceDownload // ஒப்பம் // // செ,மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசியர்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – கல்வி உதவித்தொகை திட்டம் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டு- பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவியர்களின் விவரங்கள் கோருதல் தொடர்பாக

CIRCULARS
4377-b3-2024-1Download Forms-12Download ReportDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர், அனைத்துஅரசு உயர்/மேல் நிலைப்பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – 2023-2024ம் கல்வியாண்டு           1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் திருத்திய கால அட்டவணை வெளியிடுதல் – அனைத்து வகை பள்ளிகளுக்கு –   தெரிவித்தல் – சார்பு.

annual-time-table-proceedings-1Download 2024-Annual-Exam-Sci-and-S.Sci-date-of-change-1Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து வகை தொடக்க /நடுநிலை /உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்/ தொடக்கக்கல்வி), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம் – அரசு பள்ளிகளில்  2023 – 2024  ஆம் கல்வியாண்டு –   ஆண்டு விழா நடத்தப்பட்டமைக்கான – பயன்பாட்டு சான்று சமர்ப்பிக்க   கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்காக விடுவிக்கப்பட்ட தொகைக்கான  பயன்பாட்டு சான்றினை இணைப்பில் உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) அலுவலகத்தில் 05.04.2024க்குள் மூன்று நகல்களில் சமர்ப்பிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்க தெரிவிக்கப்படுகிறது.   370-B1-Annual-Day-SchoolDownload Utilisation-certificate-Annual-day-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்/இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் கண்டுள்ள (Excel) படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (03.04.2024) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை நாளை (04.04.2024) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர்/இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் கண்டுள்ள (Excel) படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (03.04.2024) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை நாளை (04.04.2024) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Asst-JA-typist-working-detailsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர், தலைமையாசிரியர்கள் அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம்.