Author: ceo

விலையில்லா மிதிவண்டிகள் 2020-2021 -11ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மிதிவண்டிகள் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தல் ? இம்மாவட்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்தது போக இருப்பில் உள்ள மிதிவண்டிகளை M/s Avon Cycle நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
விலையில்லா மிதிவண்டிகள் 2020-2021 -11ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மிதிவண்டிகள் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தல் ? இம்மாவட்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்தது போக இருப்பில் உள்ள மிதிவண்டிகளை M/s Avon Cycle நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் நிரவல் ஆணையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CYCLE-SURPLUS-COV-LTR_20210816_0001Download Cost-Free-Cycle-allotment-order_20210816_0001Download

2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC/ SMDC) உறுப்பினர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 18.08.2021க்குள் பூர்த்தி செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை அரசு பள்ளி (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் கவனத்திற்கு, 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC/ SMDC) உறுப்பினர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 18.08.2021க்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது – 2020-21 – நிலுவை / இருப்பு விவரம் – இதுவரை சமர்ப்பிக்காத 31 பள்ளிகள் (இணைப்பில் உள்ளது) சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக.

CIRCULARS
           வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2020-21ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது. தேவை இருப்பின் நிரவல் செய்து வழங்கப்படும். இருப்பு இருப்பின் தெரிவிக்க வேண்டும். எனவே இதுவே இறுதி வாய்ப்பு. அடுத்த வருடம் இருப்பு வைக்க வேண்டாம். எனவே சரியான விவரத்தினை தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டு இன்று 11.08.2021 மாலை 5.45க்குள் சமர்ப்பிக்குமாறும், தேவை / இருப்பு – இல்லை எனினும் “இன்மை” அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் விவரம் வழங்கப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது. இதனால் விலையில்லா மிதிவண்டி இருப்பு பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.             எனவே, உடனடியாக தாமதத்திற்கான காரணத்துடன் இருப்பு மற்றும் தேவைவிவரத்தை

வேலூர் மாவட்டத்தில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து கொரோனாவால் உயிரிழந்த தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதப் பணியாளர்களின் விவரம் EMIS மூலம் 12-08-2021 அன்று மாலை 04.30 மணிக்கு படிவம் 1 மற்றும் 2ல் பதிவேற்றம் செய்ய கோருதல்

அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு (வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும்) முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் CamScanner-08-12-2021-14.51.17Download

தமிழ்நாடு அமைச்சுப்பணி பயிற்சி பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் – இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு 35 பணிநாள்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சியினை இணைய வழியாக நடமுறைப்படுத்துதல் – 2017க்கு முன்னர் பணிவரன்முறை பெற்ற இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு, தமிழ்நாடு அமைச்சுப்பணி பயிற்சி  பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் – இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு 35 பணிநாள்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சியினை இணைய வழியாக நடமுறைப்படுத்துதல் – 2017க்கு முன்னர் பணிவரன்முறை பெற்ற இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் விவரங்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக நாளை 12.08.2021 முற்பகல் 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம்- தேர்வுக் குழு – சென்னை மருத்துவர் கல்வி இயக்ககம்- MBBS/ BDS -2021-2022 -SESSSION – 2013-2014. 2014-2015 ல் ஆறாம் வகுப்பில் சேர்கை செய்யப்பட்டு +2 ஆம் வகுப்பில் ( அறிவியல் பாடப் பிரிவில் ) இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் பயின்று முடித்த மாணவர்களின் விவரங்கள் கோருதல்- தொடர்பாக

வேலூர் மாவட்டம்- தேர்வுக் குழு - சென்னை மருத்துவர் கல்வி இயக்ககம்- MBBS/ BDS -2021-2022 -SESSSION - 2013-2014. 2014-2015 ல் ஆறாம் வகுப்பில் சேர்கை செய்யப்பட்டு +2 ஆம் வகுப்பில் ( அறிவியல் பாடப் பிரிவில் ) பயின்று முடித்த இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் செயல்முறைகளில் கோரப்பட்டவாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு,

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு,

CIRCULARS
தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்களுடைய பயனாளர் பெயர் (USER NAME) மற்றும் கடவுச்சொல்லைப் (PASSWORD) பயன்படுத்தி EMIS வலைத்தளத்தில் நுழைந்து கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்களை உள்ளீடு செய்து முடிக்கும்படி அறிவுறுத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Vaccination details update செய்யும் வழிமுறைகள் Go to EMIS Website > EMIS Login> ஆசிரியர் தங்களுடைய Username/Password> dashboardல் >My Profileஐ கிளிக் செய்யவும். அவற்றில் தோன்றும் vaccination details பதிவு செய்து Save கொடுக்கவும். எனவே, அனைவரும் உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ID - EMISல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ID Password - - EMISல் அளிக்கப்பட்டுள்ள தங்களின் கைபேசி எண்ணின் முதல் 4 இலக்கங்கள் + @ +தாங்கள் பிறந்த வருடம்

மிக மிக அவசரம் – விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது – 2020-21 – நிலுவை / இருப்பு விவரம் – சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக.

அனைத்து அரசு / நகராட்சி / நிதி உதவி / பகுதி நிதி உதவி / ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2020-21ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது. தேவை இருப்பின் நிரவல் செய்து வழங்கப்படும். இருப்பு இருப்பின் தெரிவிக்க வேண்டும். எனவே இதுவே இறுதி வாய்ப்பு. அடுத்த வருடம் இருப்பு வைக்க வேண்டாம். எனவே சரியான விவரத்தினை தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டு இன்று 11.08.2021 மாலை 5.45க்குள் சமர்ப்பிக்குமாறும், தேவை / இருப்பு – இல்லை எனினும் “இன்மை” அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Cycle-2884-A4Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு – 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – மாணவர்கண் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS)  இணைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் மற்றும் ஒப்படைத்தல் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு – 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – மாணவர்கண் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS) இணைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் மற்றும் ஒப்படைத்தல் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்

CIRCULARS
அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் 2021-2022ம் கல்வியாண்டு - 01.08.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - மாணவர்கண் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் மைய (EMIS)  இணைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தல் மற்றும் ஒப்படைத்தல் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ நகராட்சி/ மாதிரி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.