2023-2024 கல்வியாண்டு 6 முதல்  12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை-பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

2023-2024 கல்வியாண்டு 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு  கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.  அனைத்து வகை பள்ளிகளிலும் இக்கால அட்டவணையினை நடைமுறைப்படுத்தி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் காலாண்டுத் தேர்வினை செம்மையாக நடத்திட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு: காலாண்டுத் தேர்வு கால அட்டவணை

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்பள்ளிகள்/தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு