அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,
மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018- அரிதான பாடங்கள் (Rare Subjects) மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் (Vocational Subjects) விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55- அரசு (மகளிர்) மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம்- இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரியிவத்துள்ள அறிவுரையினை பின்பற்றி, முதன்மைத்தேர்வாளர்/கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் உதவித் தேர்வாளர் நியமனம் செய்ய பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்க அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE Revised -RARE AND VOCATIONAL SUBJECT CE, SO, AE'S Appointment -Reliving Order
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்
நாள் 18.04.2018
இடம் :ஆற்காடு, ஸ்ரீ இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி
பிற்பகல் 3.30 மணிக்கு அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்
மாலை 4.30 மணிக்கு அரசு/அரசு நிதியுதவி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்
கூட்டத்திற்கு அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்தகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூட்டப்பொருள்
1) CLICK HERE TO DOWNLOAD THE FORM FOR VACANCY DETAILS
2) CLICK HERE TO DOWNLOAD THE Valulation Duty details
3) 2015-16, 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளுக்கான மேல்நிலைத்தேர்வு முகப்புத்தாள் தைத்தற்கான இரசீதுகள் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப
அனைத்து அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
+1 மேல்நிலைத்தேர்வுமுடிந்தவுடன் மாணவர்கள்விருப்பத்துடன் அருகில் உள்ள தொடுவானம் மையத்தில் நடைபெறும் பயிற்சியில்ககலந்துகொள்ளலாம்.
பயிற்சியில்கலந்துகொள்ளும் மாணவர்கள் விவரத்தை (கலந்துகொண்ட மையம், தமிழ் வழி மாணவர் எண்ணிக்கை, தமிழ் வழி மாணவியர் எண்ணிக்கை, ஆங்கில வழி மாணவர் எண்ணிக்கை, ஆங்கில வழி மாணவியர் எண்ணிக்கை,மொத்தம்) இவ்வலுவலகத்தில் மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்க தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018-அரிதான பாடங்கள்(Rare Subjects) மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் ( Vocational Subjects) விடைத்தாள் மதிப்பீட்டு மையம் 55-அரசு (மகளிர் மேல்நிலைப்பள்ளி,விழுப்புரம்- விடைத்தாள் மதிப்பீடு சார்பான விவரங்கள் நாளை (17.04.2018) அன்று தெரிவிக்கப்படும்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,.
அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மேல்நிலை பொதுத்தேர்வு 2018 - விடைத்தாள் மதிப்பீட்டுப்பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் சார்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி மேற்கொள்ளும் வகையில் உடனடியாக முதுகலை ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அருகில் உள்ள முகாமிற்கு அனுப்பிவைக்கும்படி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DIRECTORATE OF GOVT. EXAMINATIONS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.