Slip test question papers for +1 – REMINDER

REMINDER

TO

ALL CATEGORIES OF HR.SEC.SCHOOL HEADMASTERS,

சுற்றறிக்கை

 

அன்புள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்.

 

அனைத்து அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 11ம் வகுப்பு பாடங்களுக்கான சிறு தேர்வு (Slip Test) வினாக்கள் Website மூலம் ஏற்கனவே  04.09.2018  அன்று அனுப்பப்பட்டுள்ளது. இத்தேர்வினை மாலை நேர வகுப்பில் ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி வழங்கலாம். தங்கள் பள்ளியின் பாட ஆசிரியர்களின் விருப்பத்தின்படி தலைமை ஆசிரியர்கள் தேவை ஏற்படின் தேர்வு நாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். இத்தேர்வுகள் Test Noteல் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

தொழிற்கல்வி பாடங்களை பொறுத்தவரை பள்ளி அளவிலேயே சிறு தேர்வுகளை திட்டமிட்டு நடத்தலாம். இச்செயல்முறைகளை பாட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டு செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இத்துடன் இணைப்பட்டுள்ள வினாத்தாட்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்

CLICK HERE TO DOWNLOAD THE SLIP TEST QUESTION PAPERS

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

இணைப்பு: 11ம் வகுப்புக்கான சிறு தேர்வு வினாக்கள்