PROJECT VEERGATHA 3.0

அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு –

ப்ராஜெக்ட் வீர்கதா 3.0 நடத்துவதைக் குறிப்பிடும் வகையில், பாதுகாப்பு அமைச்சகம் 13.09.2023 அன்று மதியம் 12.00 மணி முதல் ஒரு வெபினார் அமர்வைத் (Webinar Session) திட்டமிட்டுள்ளது.  இந்த வெபினார் அமர்வு (Webinar Session)  Video Conferencing மூலம் நடைபெறும்.பள்ளி மாணவர்கள் பிரிக் உமேஷ் சிங் பாவா, VrC, SM, கேலன்ட்ரி விருது வென்றவருடன் தொடர்புகொள்வதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.  மாணவர்கள் தங்கள் திட்டங்களைச் சமர்ப்பிக்க உதவும் உத்வேகம் தரும் யோசனைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. இது சம்பந்தமாக, இணைக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவக்கப்படுகிறது.

 

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)